ரமீஷ் ராஜா பேட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய வித்ததை பார்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா, பாகிஸ்தான் அணியை பார்த்து இந்திய அணி சில விஷயங்களை காப்பியடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்னென்ன விஷயங்களை எல்லாம் பாகிஸ்தான் அணியிடம் இருந்து இந்திய அணி காப்பியடித்திருக்கிறது என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
பாக்., அணி பார்முலா
அவர் பேசும்போது, "20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பார்த்து சில விஷயங்களை காப்பியடித்திருக்கிறது. வேகத்துக்கு உம்ரான் மாலிக்கை வைத்திருக்கின்றனர். அவர் ஹரீஸ் ராஃப் போன்று அதிவேகம் வீசக்கூடியவர். அவரை இந்திய அணி துருப்புச்சீட்டாக வரும் காலத்தில் பயன்படுத்தும். இடது கை ஆர்ம் ஆங்கிள் பவுலராக பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அப்ரிடி இருக்கிறார். அவரைப் போன்று இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கை வைத்துள்ளனர். மிடில் ஓவர்களில் ஜூனியர் வசீம் பாகிஸ்தான் அணியில் பந்துவீசும் நிலையில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அந்த பணியை செய்கிறார். கூடுதலாக இந்திய அணியில் ஷிவம் மாவியை வைத்திருக்கின்றனர்.
சுழற்பந்துவீச்சில் சிறப்பு
ஆனால் சுழற்பந்துவீச்சில் அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியை ஒப்பிடும்போது இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இரு அணிகள் விளையாடும்போதெல்லாம் நான் அதனை கண்கூடாக பார்த்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்திய அணி இப்போது ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெற இருப்பதால், அதனை மனதில் வைத்து வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுத்து வருகிறது.
மேலும் படிக்க | எதிர்காலமே இவர்தான்... சாதனை மன்னனுக்கு விராட் கோலி சூடிய மகுடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ