திடீரென்று ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டீம் இந்தியா! காரணம் என்ன?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது.   

Written by - RK Spark | Last Updated : Jan 28, 2022, 03:18 PM IST
  • U-19 உலககோப்பையின் மூலம் அனைவருக்கும் பரிட்சியம் ஆன ரவி பிஷ்னோய்க்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஷாருக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென்று ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டீம் இந்தியா! காரணம் என்ன? title=

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஒருநாள் போட்டி மூன்றும் அகமதாபாத் மைதானத்திலும், டி20 போட்டிகள் மூன்றும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ALSO READ | சென்னை வந்துள்ள தோனி! காரணம் இதுதான்!

இதற்கான இந்திய அணி (Team India) இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஸ்பின்னர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.  குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய்க்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் எடுப்பதற்கு இவர்களை அணியில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு U-19 உலககோப்பையின் மூலம் அனைவருக்கும் பரிட்சியம் ஆன ரவி பிஷ்னோய், ஐபிஎல் போட்டியிலும் சிறந்து விளங்கினார்.  இந்நிலையில் தற்போது இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இவரை லக்னோ சூப்பர் சீன்ஸ் 4 கோடிக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் உள்ள பிரச்சினபிசிபிசிசிஐ தற்போது கண்டுகொண்டு உள்ளது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காத காரணத்தினாலேயே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி  இழந்தது.  இதன் காரணமாக தற்போது ஸ்பின்னர்கள் மீண்டும் அணியில் எடுத்துள்ளது.  குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களுடன் இந்திய அணி விளையாடவுள்ளது.  மேலும் ஐபிஎல்-ல் டெல்லி அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ் கானிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் இருந்து பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, சதுர் தாக்கூர், சிராஜ், தீபக் சஹர் போன்ற இளம் வீரர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளது.  சமீபத்தில் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News