இங்கிலாந்து சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல், இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இந்தியா அணி படுமோசமாக தோற்றது. டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா தோற்றது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி மீதும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல மூத்த கிரிக்கெட் வீரர்களும் ரவி சாஸ்திரி மீது விமர்ச்சனம் வைத்துள்ளன.
இந்திய அணி அடுத்து டெஸ்ட் போட்டியை பொருத்த வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. அதேபோல ஒருநாள் போட்டியை பொருத்த வரை அடுத்து ஆசியா கோப்பை, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்தில் அந்நாட்டு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா அணி இழந்துள்ளதால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வரும் நவம்பர்(2018) முதல் அடுத்த ஆண்டு(2019) பிப்ரவரி மாதம் வரை இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுபயனம் மேற்கொள்கிறது. இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில், டெஸ்ட் தொடருக்கு முன்பாக குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட வேண்டும் என நினைக்கிறோம். அப்பொழுதான் அந்நாட்டு சுழல் மற்றும் மைதானத்துக்கு ஏற்ப தங்களை வீரர்கள் மாற்றிக்கொள்ளுவார்கள். எனவே பயிற்ச்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. பயிற்சி ஆட்டத்தை கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்யும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்ச்சி ஆட்டம் நடத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.,யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என கூறினார்.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் போதும், நேரமில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.