சச்சின் டெண்டுல்கரே சொன்னாலும் சரி! நான் சொல்றது இதுதான்! தோல்வி குறித்து R அஸ்வின்

Team India vs R ashwin: WTC இறுதிப் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மௌனத்தை உடைத்த ஆர். அஸ்வின் தெரிவித்த கருத்தும், ரசிகர்களின் ஆச்சரியமும்!   

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2023, 01:59 PM IST
  • ஆஸ்திரேலியாவை ஏன் வெல்ல முடியவில்லை?
  • மெளனம் கலைந்த அஸ்வின்!
  • ரசிகர்களின் ஆச்சரியமும் வியப்பும்
சச்சின் டெண்டுல்கரே சொன்னாலும் சரி! நான் சொல்றது இதுதான்! தோல்வி குறித்து R அஸ்வின் title=

நியூடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது மெளத்தை கலைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் (WTC Final) ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது தொடர்பாக போட்டிக்கு முன்னரே சர்ச்சைகள் எழுந்தன.

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணி தொடர்பான தனது கருத்தை வெளிப்படுத்தினார்.  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி குறித்து உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் அப்படி என்ன சொன்னார்?

மேலும் படிக்க | WTC Final 2023: ஆஸ்திரேலியா அபார வெற்றி..! 2வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்ற இந்தியா

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அஸ்வின் தனது ட்விட்டர் கணக்கில் WTC கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவை வாழ்த்தினார் மற்றும் இந்திய அணியின் முயற்சிகளைப் பாராட்டினார்.

அஷ்வினின் இந்த பாராட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

இவ்வாறு போட்டியை முடித்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது, இரண்டு ஆண்டுகளில் இது ஒரு பெரிய முயற்சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்று, கோப்பையைப் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் தோல்வி ஏமாற்றமளிக்கிறது, இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளில் இது ஒரு பெரிய முயற்சி.

மேலும் படிக்க | ஏய் உனக்கு மூளை இருக்கா? ராகுல் டிராவிடை விமர்சிக்கும் பாசித் அலி மீது விமர்சனம்

அனைத்து குழப்பங்கள் மற்றும் மோசமான மதிப்பீடுகளுக்கு மத்தியில், இந்த போட்டியில் விளையாடிய எனது குழுவின் தோழர்கள் மற்றும் அணியின் ஊழியர்களை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், என்று ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.

92 போட்டிகளில் 51.8 ஸ்டிரைக் ரேட்டில் 474 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் அஷ்வின் இந்தப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படாதது தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில், அவர் தனக்கு வருத்தம் ஏதும் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

WTC இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அஸ்வினை அணியில் சேர்க்க முடியாததற்கான காரணத்தை முன்னரே தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | WTC Final 2023: போட்டியின் இரண்டாம் நாளில் ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, முகமது சிராஜின் சாதனைகள்

மழைச் சூழல் காரணமாக,நான்காவது சிறப்பு வேகப்பந்து வீச்சாளருடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். ஆனால், அணியில் இருந்து ஆர்.அஸ்வின் நீக்கப்பட்டதை இந்திய அணியின் முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கரும் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இடது கை பேட்டர்கள் 5 பேர் இருந்த போதிலும், இந்திய அணியில் அஷ்வின் இடம் பெறாதது சரியான முடிவில்லை என்று அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து சச்சின் வருத்தம் தெரிவித்தார்.

13 டெஸ்டில் 61 விக்கெட்டுகள்

WTC இன் இரண்டாவது சீசனின் இரண்டு வருட சுழற்சியில் 13 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 92 டெஸ்ட் போட்டிகளில் 474 விக்கெட்டுகளை வீழ்த்தி 3129 ரன்களையும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறந்த ஸ்கோர் 124 ஆகும். ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், 65 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களும், டி20 போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார். 197 ஐபிஎல் போட்டிகளில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி 714 ரன்கள் எடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மீண்டும் மீண்டுமா... 2014 டூ 2023 இந்திய அணி தோற்ற ஐசிசி நாக்-அவுட் போட்டிகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News