R Ashwin set to rejoin Team India: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். பிறகு முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் அடித்தது. டக்கெட் மட்டும் 153 ரன்கள் அடிக்க மற்ற இங்கிலாந்து வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை, இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மீதமுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில், இந்திய அணி நான்கு பவுலர்களை மட்டுமே வைத்து முதல் இன்னிங்சில் பந்து வீசியது. இருப்பினும் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்தது.
UPDATE R Ashwin set to rejoin #TeamIndia from Day 4 of the 3rd India-England Test.#INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/rU4Bskzqig
— BCCI (@BCCI) February 18, 2024
இந்நிலையில் பிசிசிஐ அஸ்வின் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் இணைய உள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குடும்ப அவசரநிலை காரணமாக அணியில் இருந்து வெளியேறிய ஆர் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டின் 2வது நாளுக்குப் பிறகு, ரவிச்சந்திர அஸ்வின் அணியில் இருந்து தற்காலிகமாக விலகினார். இந்நிலையில், ஆர் அஷ்வின் 4வது நாளில் மீண்டும் களமிறங்க உள்ளார். மேலும் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அணியின் தொடர்ந்து பங்களிப்பார்.
அணி நிர்வாகம், வீரர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை முன்னுரிமையாக ஒப்புக்கொண்டு, அபரிமிதமான புரிதலையும் அனுதாபத்தையும் காட்டியுள்ளனர். இந்த சவாலான காலகட்டத்தில் அணியும் அதன் ஆதரவாளர்களும் அஷ்வினுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுள்ளனர், மேலும் அவரை மீண்டும் களத்திற்கு வரவேற்பதில் பிசிசிஐ நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. கிட்டத்தட்ட 430 ரன்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது. ஜெய்ஷ்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
மேலும் படிக்க | Ravichandran Ashwin: அஸ்வினுக்கு பதிலாக படிக்கல் பேட்டிங் செய்ய முடியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ