ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Last Updated : May 25, 2016, 01:22 PM IST
ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது title=

முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்சும் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இக்பால் அப்துல்லா வீசிய ஒரே ஓவரில் மெக்கல்லம் 1 ரன் மற்றும் பிஞ்ச் 4 ரன் எடுத்து இருவரும் வெளியேறினார். தொடர்ந்து ஆட வந்த கேப்டன் சுரேஷ் ரெய்னா 1 ரன் எடுத்து  வாட்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற டிவைன் ஸ்மித் மட்டும் நிலையாக நின்று அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

கடைசியாக குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு களமிறங்கியது கோலி ரன் எடுக்காமல் குல்கர்னி வீசிய பந்தில் பவுல்டு ஆனார், சிறிது நேரத்தில் குல்கர்னி பந்தில் கெயில் பவுல்டு ஆனார். அடுத்த பந்திலேயே ராகுல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வாட்சன் 1 ரன்னிலும், சச்சின் பேபி 0 ரன்னிலும் வெளியேறினார். 6-வது ஓவரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனாலும் மறுமுனையில் டிவில்லியர்ஸ் பொறுமையாகவும், பின்பு அதிரடியாகவும் ஆடி 47 பந்துகளில் 5 பவுண்ட்ரி 5 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்து தனது பெங்களூரு அணி அபார வெற்றி பெறசெய்தார்.

இப்போட்டியில் குஜராத் லயன்ஸ் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு உள்ளது.

ஆட்ட நாயகன் விருது டிவில்லியர்ஸ் கொடுக்கப்பட்டது.

Trending News