இந்த இந்திய வீரர்களுக்கு ஓய்வு? - அணியில் முக்கிய வீரர் - அடுத்த போட்டியில் நிறைய மாற்றம்!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கக்கூடும் என கூறப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2023, 04:20 PM IST
  • கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்துடன் இந்தியா விளையாடுகிறது.
  • இந்திய அணி முதலிடத்தை சீல் வைத்துள்ளது.
  • முதல் அரையிறுதியில் இந்தியா விளையாடும்.
இந்த இந்திய வீரர்களுக்கு ஓய்வு? - அணியில் முக்கிய வீரர் - அடுத்த போட்டியில் நிறைய மாற்றம்! title=

India National Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்றில் இந்திய அணி மட்டும் தோல்வியடையாமல், முதலிடத்தில் உள்ளது. லீக் சுற்று வரும் ஞாயிற்றுக்கிழமையோடு (நவ. 12) நிறைவடைகிறது. அன்று இந்தியா - நெதர்லாந்து (IND vs NED) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் நான்காவது அணியாக நிறைவு செய்யும் அணியை எதிர்நோக்கி இந்தியா காத்திருக்கிறது. 

இந்திய அணி (Team India) அரையிறுதியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் இல்லையெனில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளது. மேலும் அரையிறுதி போட்டி (World Cup Semi-Final) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே, இந்திய அணி வீரர்கள் அரையிறுதியிலும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனலாம். இந்திய அணியினர் தற்போது நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் விளையாட பெங்களூருவுக்கு வந்துள்ளது. 

இந்த தொடரின் தொடக்கத்தில் ஓப்பனர் சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக இஷான் கிஷன் அவருக்கு பதில் விளையாடினர். அஸ்வின் முதல் போட்டிக்கு மட்டும் சேர்க்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று போட்டிகளில் 8ஆவது வீரராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். அதன்பின், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அணிக்குள் வந்தார். மேலும், ஒரு முழுநேர வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்பதால் ஷர்துலுக்கு பதில் ஷமி உள்ளே வந்தார்.

மேலும் படிக்க | இந்தியாவ ஜெயிக்க எங்கள தாண்டனும்... தொடுடா பாக்கலாம் - தூணாக நிற்கும் மூவேந்தர்கள்!

இப்போது ஷமி - பும்ரா - சிராஜ் - குல்தீப் - ஜடேஜா என 5 பந்துவீச்சாளர்களை வைத்தே இந்திய அணி தரமான பந்துவீச்சை வைத்துள்ளது. தற்போது ஹர்திக் பாண்டியா தொடரில் இருந்து விலகிய பின் பிரசித் கிருஷ்ணா (Prasid Krishna) அணியில் சேர்க்கப்பட்டார். இவர் இன்று பெங்களூருவில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெற இன்னும் 5 நாள்கள் இருப்பதால் வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபடும். 

அப்படியிருக்க நெதர்லாந்து போட்டியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதில் முக்கியமாக வேகப்பந்துவீச்சாளர்களான சிராஜ் - பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளித்து, பிரசித் கிருஷ்ணா அந்த ஒரு போட்டியில் மட்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த இருவரும்தான் சமீப காலங்களில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். அரையிறுதி போட்டியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நெதர்லாந்து போட்டியில் ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. 

மேலும், குல்தீப் யாதவுக்கு அஸ்வினை (Ravichandran Ashwin) இந்த போட்டியில் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு மைதானம் சிறியது என்றாலும் அஸ்வினை நீண்ட நாளாக பெவிலியனுக்குள் வைத்திருப்பதற்கு பதில் இந்த போட்டியில் விளையாட வைக்கலாம் பல ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அரையிறுதி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்திலும், இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது. அதில் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்பேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது கேஎல் ராகுலுக்கு (KL Rahul) ஓய்வளிக்க விரும்பினால் இஷான் கிஷனுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித், கோலி, கில் நீக்கம்! ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இந்திய அணி!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News