இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி விஷாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 215(371), ரோகித் ஷர்மா 176(244) ரன்கள் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் அதிகப்பட்சமாக டீக் இக்ளர் 160(287), குவின்டன்-டி-காக் 111(163) ரன்கள் குவித்தனர்.
71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோகித் ஷர்மா 127(149) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக புஜாரா 81(148) ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 393 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது.
இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா, பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
- சராசரி 100-ஐ தாண்டியது: விசாகப்பட்டினத்தில் இரண்டு சதம் பதிவு செய்ததன் மூலம் ரோகித் சர்மா, வீட்டு டெஸ்டில் சராசரியாக 100 கடந்தார். இதன் மூலம் டான் பிராட்மேனின் சராசரியான 98.22-ஐ முறியடித்தார். மேலும் ரோகித் சர்மா இப்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதங்களும் ஆறு அரைசதங்களும் அடித்தவர் என்ற பொருமையினை கொண்டுள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள்: விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா 13 சிக்ஸர்களை அடித்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் வசீம் அகராமின் 12 சிக்ஸர்கள் என்ற நீண்டகால சாதனையை ரோஹித் முறியடித்தார். அக்ரம் 1996-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
- ஒரு தொடக்க வீரராக இரு இன்னிங்ஸ்களிலும் சதம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடக்க வீரராக தனது முதல் வெளியேற்றத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் ரோகித் சர்மா.
- இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸ்டம்பிங்: இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோகித் சர்மா ஸ்டம்பிங் ஆனார். இதன் மூலம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றார்.