விளையாட்டு செய்திகள்: தென்னாப்பிரிக்கா அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரை விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இம்மாத 22ஆம் தேதி, டி20 உலகக்கோப்பையின் பிரதான சுற்றுகள் தொடங்க உள்ளது. எனவே, உலகக்கோப்பைக்கு முந்தைய இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்ததது. இருப்பினும், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்று இறுதி டி20 போட்டியில், இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா உடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது.
'சூப்பர்மேன் சூர்யகுமார்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்வானார். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் சொதப்பியிருந்தாலும், அவரின் தொடர் அதிரடி ஆட்டம் இந்தியாவை பல போட்டிகளில் காப்பாற்றியிருக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பின்பு நடந்த போஸ்ட் மேட்ச் பெரசேன்டேஷனில் வர்ணனையாளர் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு, ரோஹித் சர்மா அளித்த பதில் சூர்யகுமார் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சொத்து என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
That Winning Feeling!
The @ImRo45-led #TeamIndia lift the trophy as they win the T20I series against South Africa. #INDvSA | @mastercardindia pic.twitter.com/9he7Ts1Wq7
— BCCI (@BCCI) October 4, 2022
விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்
முரளி கார்த்திக்: 'வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்றால்...?'
ரோஹித் சர்மா: 'அப்படி பார்த்தால், பலவற்றை குறித்து கவலைக்கொள்ள வேண்டும். முதலில் கவலை என்றால், அது சூர்யாகுமாரின் ஃபார்ம்தான் மிகப்பெரிய கவலை...' என கூறிவிட்டு சிரிக்கத்தொடங்கினார். மேலும், அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
— cricket fan (@cricketfanvideo) October 4, 2022
பெரும்பாலும் நான்காவது வீரராக களமிறங்கும் சூர்யகுமார், சுழற்பந்து, வேகப்பந்து என பாரபட்சமின்றி 360 கோணங்களிலும் பந்தை பறக்கவிடும் நுணக்கத்தை கொண்டுள்ளார். அவரின் இந்த முறை அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு, பவர்பிளேக்கு பிந்தைய மற்றும் டெத் ஓவர்களுக்கு முந்தைய ஓவர்களில் தொய்வில்லாமல் ரன்களை குவிக்க உதவுகிறது. எனவே, தான் சூர்யகுமாரின் தேவை என்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாகிறது. எனவே, இந்த ஃபார்ம் உலகக்கோப்பை முடிவு வரை நீடிக்க வேண்டும் என்பதே ரோஹித் சர்மா மட்டுமின்றி அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம்
மேலும், உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 8 வீரர்கள் இதுவரை ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடியது இல்லை. எனவே, இந்தியா அணி மிக விரைவாகவே ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளது. பும்ரா, ஜடேஜா ஆகியோரின் வெற்றிடங்களை போக்க தகுதியான வீரர்களை அடையாளம் காண்பதற்கும் இந்த பயிற்சி கைக்கொடுக்கும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கேட்சை விட்டதற்கு சிராஜை திட்டும் சஹார்! குழப்பத்தில் ரோஹித்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ