1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இடம்பிடித்திருந்த ரொனால்டோவுக்கு, ஞாயிற்றுக்கிழமை கொரோனா அறிகுறிகள் லேசாக தென்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்ததில், கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதனையொட்டி, தான் முதன்முதலாக கால்பந்து விளையாடிய க்ரூசிரோ கிளப் அணியின் 101-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்த்துவிட்டார்.
ALSO READ | சாதனை படைக்குமா இந்தியா? இன்று இரண்டாவது டெஸ்ட்!
அவர் விரைவில் உடல் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரொனால்டோவுக்கு கொரோனா லேசான அறிகுறிகளுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கால்பந்து வீரர்களுக்கான மிக உயரிய விருதுகளுள் ஒன்றான FIFA கால்பந்து வீரராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரொனோல்டோ. அவருக்கு வயது 45.
மிக குறுகிய காலத்திலேயே தொழில்முறை கால்பந்து வீரராக தன்னை மாற்றிக்கொண்ட அவர், பார்சிலோனா, இன்டர் மிலான், ரியல் மாட்ரிட் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். தான் முதன் முதலாக தொழில்முறை கால்பந்து வீரராக அறிமுகமான க்ரூசிரோ கிளப், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதிச் சிக்கலில் இருப்பதை அறிந்த அவர், அண்மையில் அதனுடைய பெரும்பங்கை தன்வசப்படுத்தி அந்த கிளப்புக்கு உயிரூட்டினார். ரொனால்டோவைப் போலவே மற்றொரு கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ALSO READ | ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR