ஆஸ்திரேலியா அணியை நாங்கள் வீழ்த்தியது இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் என தென்னாப்பிரிக்கா கேப்டன் டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவு பெற்றது. நேற்றைய போட்டிகளின் பின்னர் இறுதி செய்யப்பட்ட புள்ளி பட்டியல் படி முதல் இடத்தில் 15 புள்ளிகளுடன் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும் உள்ளது. மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே 12, 11 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.
புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது, நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது தான். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் டூபிளசிஸ் 100(94) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ராய்சி வான் டிர் டூசன் 95(97) ரன்கள் குவித்தார்.
“I had high expectation of myself as a player but also as a captain to lead from the front.”
South Africa skipper #FafDuPlessis was glad that his team finished #cwc19 on a high. pic.twitter.com/BNKbcZ6LlG
— Cricket World Cup (@cricketworldcup) July 7, 2019
இதனையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தின் 49.5-வது பந்தில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டூப்ளசிஸ் உலக கோப்பை தொடரில் தனது இரண்டாது சதத்தினை பதிவு செய்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூப்ளசிஸ் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களுடன் தெரிவிக்கையில்., "ஆஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியது இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் என நம்புகிறோம். கடந்த 3 போட்டிகளில் சரியான பார்மில் இல்லாத நியூசிலாந்து அணி நிச்சையம் அரையிறுதியில் தோற்று போகும். இறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ளும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.