விரைவில் நிலைமை மாறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

கொரோனா அச்சத்தால் ஸ்தம்பித்துப்போன விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெறும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 8, 2020, 11:21 PM IST
  • கொரோனா காரணமாக, ஒலிம்பிக் திட்டம் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு, ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • இந்தியாவின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர், இந்த காலக்கட்டத்தை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

Trending Photos

விரைவில் நிலைமை மாறும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்... title=

கொரோனா அச்சத்தால் ஸ்தம்பித்துப்போன விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெறும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ZEE குழுமம் நடத்தி இந்தியாவின் DNA E-Conclave-ல் பேசிய மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு (Kiren Rijiju), கொரோனா காரணமாக விளையாட்டு நடவடிக்கைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்திருந்தாலும், Unlock-1 தொடங்கப்பட்டுள்ள பின்னர் சில நடைமுறை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் சில விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கௌதம் கம்பீரை அந்த ஒரு வார்த்தை கூறி ட்ரோல் செய்தார் யுவராஜ் சிங்... 
மேலும், கொரோனா காரணமாக, ஒலிம்பிக் திட்டம் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு, ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறை ஒரு பெரிய தொழில். இதில், ஆர்வத்திலிருந்து வணிக ஆர்வம் வரை இணைக்கப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் இருந்தால், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஆனால் கொரோனா காரணமாக, இந்த நேரத்தில் நாட்டில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இந்தியாவின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர், ஒலிம்பிக்கை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது சிறிய விஷயம் அல்ல, இது உலகின் மிகப்பெரிய நிகழ்வு, ஆனால் தற்போது இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

தங்கள் நாட்டில் IPL போட்டிகளை நடத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் UAE!...

வீரர்கள் நாட்டிற்காக அங்கு செல்ல இருக்கின்றனர், பின்னர் அவர்கள் வேறு அளவிலான தயாரிப்புகளைக் கொண்டுள்ளனர். ஒரு வருடத்திற்கு அந்த அளவைப் பராமரிப்பது எளிதானது அல்ல. ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர்கள் தங்கள் பயிற்சிக்காக திட்டமிட்டு வருகின்றனர், அவர்களுக்கு உதவ அரசு முன்முயற்சி எடுத்து வருகிறது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

Trending News