டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!

டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2024, 10:28 AM IST
  • ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
  • முக்கிய போட்டியில் ஸ்கால்லாந்து தோல்வி
  • குரூப் 8 சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து
டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்! title=

டி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் விளையாடிய முன்சே 35 ரன்களும், பிரண்டன் மேக்முல்லன் 64 ரன்களும், பெரிங்டன் 42 ரன்களும் எடுத்தனர். இறுதி கட்டத்தில் மேத்யூ கிராஸ் 18 ரன்கள் எடுத்தார். குறிப்பாக 15 வது ஓவருக்குப் பிறகு ஸ்காட்லாந்து அணி அதிரடி காட்டவில்லை. இன்னும் கொஞ்சம் அதிரடியாக ஆடியிருந்தால் 200 ரன்களுக்கும் மேல் கூட எடுத்திருக்கலாம். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான ஸ்கோரையே வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது ஸ்காட்லாந்து.

மேலும் படிக்க | டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?

இதனையடுத்து இப்போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. இப்போட்டியில் ஆஸி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும், இல்லை என்றால் ஸ்காட்லாந்து அணி தகுதி பெறும் என்ற நிலை இருந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என மைதானத்தில் சப்போர்ட் செய்தனர். ஸ்காட்லாந்து பவுலிங் ஆரம்பத்தில் சூப்பராக இருந்தது. 60 ரன்களுக்குள் வார்னர், மார்ஷ், மேக்ஸ்வெல் என மூன்று விக்கெட்டுகளை எடுத்துவிட்டனர். 

இதனால் ஆஸ்திரேலிய  அணி தடுமாற்றத்தில் தான் இருந்தது. ஸ்காட்லாந்து அணியினரும் தொடர்ச்சியாக பவுலிங்கை மாற்றிக் கொண்டே இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருப்பினும் அனுபவம் வாய்ந்த வீரர்களான டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டொயினஸ் ஆகியோர் 13வது ஓவருக்குப் பிறகு கியரை மாற்ற தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஸ்டொயினஸ் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். இதனால், தோல்வி நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி வெற்றி பக்கம் திரும்பியது. ஓப்பனிங் இறங்கி மெதுவாக ஆடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டும், அதன்பிறகு அதிரடி பக்கம் திரும்ப தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் விளாசி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டொயினஸ் 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெற்றிக்கு அருகில் ஆஸ்திரேலிய அணி வந்துவிட்டதால் இவர்கள் இருவரின் விக்கெட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முடிவில் 2 பந்துகளை மீதம் வைத்து 186 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அத்துடன் குருப் பி பிரிவில் 4 போட்டிகளையும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றியின் மூலம் குருப் பி பிரிவில் 5 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன்ரேட்இல்லாததால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் அந்த அணியின் கிரிக்கெட் டாப் டீம்களை உற்றுநோக்க வைத்தது.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய நேபாளம் - 1 ரன்னில் தோல்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News