பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? ஐபிஎல்லில் இருந்து தூக்க திட்டம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  

Written by - RK Spark | Last Updated : Jun 18, 2024, 05:46 PM IST
  • புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பாகிஸ்தான்.
  • ஐபிஎல் பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்.
  • டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளது.
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? ஐபிஎல்லில் இருந்து தூக்க திட்டம்! title=

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து வரும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றில் இருந்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெளியேறி உள்ளது. சூப்பர் 8க்கு தகுதி பெறலாம் வெளியேறியதால் பாகிஸ்தான் நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மிகுந்த ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளார். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். தற்போது பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ள நிலையில், அணிக்குள் ஒற்றுமை இல்லை தான் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க |  இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுக்குள் இருக்கும் பிரிவினையை சரி செய்ய வேண்டும் என்றும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. இது ஒரு அணியே இல்லை. எந்த ஒரு வீரரும் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் தனி தனியாக இருக்கின்றனர். நான் பல அணிகளுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு அணியை பார்த்தது இல்லை" என்று கிர்ஸ்டன் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியில் உள்ள பெரிய பிரச்சனை எந்த ஒரு பயிற்சியாளரும் நீண்ட நாட்கள் இருப்பதில்லை. தற்போது புதிய பயிற்சியாளரை தேடும் முயற்சியில் பாகிஸ்தான் உள்ளது. ஐபிஎல் தலைமை பயிற்சியாளர்களை குறி வைத்துள்ளது.

ட்ரெவர் பேலிஸ்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ட்ரெவர் பெய்லிஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளது. மிகவும் அனுபவமிக்க பயிற்சியாளரான இவர் ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். நிறைய சாதனைகளை படைத்துள்ள இவரை பாகிஸ்தான் தற்போது குறிவைத்துள்ளது. சர்வதேச அணிகளை தாண்டி சிட்னி சிக்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ்க்கு கடந்த இரண்டு சீசன்களாக பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆனால் இவரது தலைமையில் பஞ்சாப் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, பஞ்சாப் அணி இவரை மாற்றினால் பாகிஸ்தான் அணிக்கு இவர் செல்ல வாய்ப்புள்ளது.

மார்க் பவுச்சர்

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்க் பவுச்சர் தற்போது ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளர்களில் ஒருவராக உள்ளார். இவரை பாகிஸ்தான் வாரியம் அடுத்த தலைமை பயிற்சியாளராக குறிவைக்கக்கூடும். ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனவே மும்பை அணி இவரை மாற்ற நினைக்கலாம். பவுச்சர் 2019 முதல் 2022 வரை தென்னாபிரிக்கா அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். பவுச்சர் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக செயல்பட்டது. எனவே இவரது தேவை பாகிஸ்தானுக்கு நிறைய உள்ளது.

மேலும் படிக்க |  இனி சிஎஸ்கே அணிக்கு இவர் கேப்டனும், கீப்பரும்... ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு கன்பார்ம்?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News