நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் கெத்து காட்டிய விராட்; ஏபி டிவில்லியர்ஸ் போல் ஆடிய சூர்யகுமார் யாதவ்

நெதர்லாந்து அணிக்கு எதிராக மீண்டும் விராட் கோலி விஸ்வரூபம் எடுத்த நிலையில், எபி டிவில்லியர்ஸ் போல் மைதானம் முழுவதும் பந்துகளை பறக்க விட்டார் சூர்யகுமார் யாதவ்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2022, 03:07 PM IST
  • விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் அபாரம்
  • நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டம்
  • வலுவான ஸ்கோரை டார்க்கெட்டாக்கியது இந்தியா
நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் கெத்து காட்டிய விராட்; ஏபி டிவில்லியர்ஸ் போல் ஆடிய சூர்யகுமார் யாதவ் title=

20 ஓவர் உலக கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, 2வது போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கியது. சிட்னியில் மழைக்கு வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

கே.எல்.ராகுல் அவுட்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுல் இந்த முறையும் எல்பிடபள்யூ என்ற முறையில் வெளியேறினார். இந்த விக்கெட் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்பதை புரிந்து கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, கிங் கோலியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி 10 ஓவர் வரை மெதுவாக விளையாட, அதற்கு மேல் அதிரடி காட்டத் தொடங்கியது. 

மேலும் படிக்க | T20 world cup: உலக கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரருக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் அணி

ரோகித் அரைசதம்

குறிப்பாக ரோகித் சர்மா அதிக பந்துகளை எதிர் கொண்டுவிட்டதால், அடித்து ஆட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால், யார் போட வந்தாலும் அடிப்பதிலேயே குறியாக இருந்தார். ஒன்றிரண்டு ஷாட்டுகள் அவருக்கு வசமாகவில்லை என்றாலும் 39 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர்களும் அடங்கும். ரோகித் வெளியேறிய பிறகு இந்திய அணியின் ஆட்டம் இன்னும் அடுத்த லெவலுக்கு சென்றது.

கோலி - சூர்யகுமார் கூட்டணி 

களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், கோலியுடன் ஜோடி சேர்ந்து நெதர்லாந்து பந்துகளை அடித்து பறக்க விட்டார். இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் என்ற பட்டபெயருக்கு ஏற்றார்போல் மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பந்துகளை அடித்து நெதர்லாந்து அணியினருக்கு தலைவலியாக மாறினார். மறுமுனையில் விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களில் 179 ரன்கள் விளாசியது.

மேலும் படிக்க | ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் ஒரே சம்பளம்தான் - பிசிசிஐயின் புரட்சிக்கர அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News