India vs Sri Lanka T20I Series: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இலங்கை அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் படையுடன் முதலில் 20 ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவலி தொடங்கியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது என குழப்பத்தில் இருக்கிறாராம். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2 பிளேயர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது என்பது மிகவும் கடினம்.
இலங்கை சுற்றுப் பயணம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் சேர்க்கப்படாததால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய களம் காண இருக்கிறது. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதால், இந்த முறையும் அவருக்கே பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | இனி இந்திய வீரர்களுக்கு இது ரொம்ப முக்கியம் - பிசிசிஐ புதிய திட்டம்
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை, சுப்மான் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது இப்போதைக்கு சந்தகேம் என கூறப்படுகிறது. வாஷிங்டன் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக இருப்பதால், அவர்களுக்கு பதிலாக ஹூடா மற்றும் சாஹல் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சு
கடந்த சில மாதங்களாக யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சு எடுபடவில்லை. அவர் கடந்த ஆண்டில் 10 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக அக்சர் பேடல் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்
சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல்.
மேலும் படிக்க | ஓய்வு தரவில்லை: ரிஷப் பந்த் குடும்பத்தினர் வைக்கும் குற்றசாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ