ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணிக்கு, வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்குப் மேலாக இந்திய அணியில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால், மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அணிக்கு திரும்பியிருப்பது இரண்டு இந்திய வீரர்களின் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
உமேஷ் யாதவால் அச்சுறுத்தல்
இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த உமேஷ் யாதவ், அங்கு சிறப்பாக செயல்பட்டு அணி தேர்வாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பிசிசிஐ தேர்வாளர்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் உமேஷ் யாதவுக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுக்கலாம். அவர் அணிக்கு திரும்பும்பட்சத்தில் ஹர்ஷல் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரின் வாய்ப்பு கேள்விக்குறியாகும்.
மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!
காயத்தில் இருந்து வந்தவர்கள்
ஹர்சல் படேல் மற்றும் தீபக் சாஹர் இருவரும் காயத்தில் இருந்து மீண்டு, மீண்டும் களமிறங்குகின்றனர். ஹர்ஷல் படேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை 2022-ல் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் தீபக் சாஹர் ஆசிய கோப்பைக்கு முன்பு அணிக்கு திரும்பினார். ஹர்ஷல் படேல் தனது கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது காயமடைந்த அவர் இப்போது தான் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
உமேஷ் யாதவ் ரெக்கார்டு
உமேஷ் யாதவ் இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் 158 விக்கெட்டுகளையும், 75 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் டெஸ்ட் அணியில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது இடத்தைப் பிடிக்க முடியவில்லை. உமேஷ் யாதவ் பிப்ரவரி 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ