தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 5, 2024, 10:51 AM IST
  • குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி
  • போட்டிக்குப் பிறகு தினேஷ் முன்பு தலைவணங்கிய விராட்
  • ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம்
தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா? title=

ஆர்சிபி, ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் டூபிளசிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரின் அதிரடி பேட்டிங்கில் 148 ரன்கள் வெற்றி இலக்கை ஆர்சிபி அணி 14 ஓவர்களிலேயே எட்டியது. டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் பவுலிங் செய்வதாக அறிவித்த நிலையில், குஜராட் டைட்டன்ஸ் அணி பேட்டிங் களமிறங்கியது.

மேலும் படிக்க | தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. ஆரம்பம் முதலே துல்லியமாக பந்துவீசி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாருக்கான் 37, டேவிட் மில்லர் 30, ராகுல்திவாட்டியா 35 ஆகியோரின் கணிசமான பங்களிப்பின் காரணமாக 140 ரன்களுக்கும் மேல் எடுக்க முடிந்தது.

ஆர்சிபி அணியில் சிராஜ், விஜயகுமார் வைஷாக், யாஷ் தயால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பேட்டிங்கிற்கு சொர்கபூமியான சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 147 ரன்கள் குஜராத் அடித்தது மிக சொற்பமான ரன்களே என்றே எல்லோரும் நினைத்தனர். ஆர்சிபி அணி பேட்டிங் இறங்கியதும், அது தெள்ள தெளிவாக உறுதியானது. அதாவது, விராட் கோலி, டூபிளசிஸ் இருவரும் மரண அடி அடித்தனர். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை நோகடித்தனர்.

ஒரு கட்டத்தில் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆர்சிபி சேஸிங் செய்துவிடும் என்ற நிலையில் அந்த அணியின் ரன்வேட்டை இருந்தது. அதன்பின்னர் குஜராத் அணியின் பவுலர்கள் கம்பேக் கொடுத்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆர்சிபி அணியின் முதல் விக்கெட்டே 92 ரன்களுக்கு தான் விழுந்த நிலையில், அடுத்த 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை விட்டுவிட்டனர். இருப்பினும் 13 ஓவர்களில் குஜராத் நிர்ணயித்த வெற்றி இலக்கை எட்டி, ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலிலும் ஏழாவது இடத்துக்கு முன்னேறினர். 

அதேநேரத்தில் ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி முதல் இடத்துக்கு முன்னேறினார். இதனால் அவரிடம் ஆரஞ்சு தொப்பி மீண்டும் வந்தது. இந்த தொப்பியை தினேஷ் கார்த்திக் பரிசாக கொடுக்க, விராட் கோலி அதனை தலைவணங்கி ஏற்றுக் கொண்டார். தினேஷ் கார்த்திக் முன்பு விராட் கோலி தலை வணங்கிய வீடியோ இப்போது சோஷியல் மீடியாவிலும் டிரெண்டாகியுள்ளது.

மேலும் படிக்க | ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News