புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இரண்டு உலக கோப்பை வெற்றிகளிலும் இந்திய அணியின் நட்சத்திரமாக இருந்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்துக்கு எதிராக கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியிலும் அற்புதமான அரை சதங்களை அடித்தார், அதே நேரத்தில் 2011 உலகக் கோப்பையில் போட்டியின் சிறந்த வீரராகவும் விளங்கினார்.
இருப்பினும், யுவராஜ் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு காரணம், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தான். அதன்பிறகு, அவர் சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.
அவர் 2012 இல், சிகிச்சைக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியபோது, அவர், அதற்கு முன் இருந்த பேட்டர் என்று சொல்ல முடியாது, சிகிச்சைக்குப் பிறகு அணியில் தனது இடத்தை தக்கவைக்க போராடினார்.
யுவராஜ் சிங் தனது கடைசி ஒருநாள் போட்டியில் 2017 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடினார், அதே ஆண்டில் அவர் தனது அதிகபட்ச ODI ஸ்கோரான 150 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அடித்தார்.
டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன, ஆனால் அவரது செயல்திறன் தேவைக்கு ஏற்றதாக இல்லை.
சிகிச்சைக்குப் பிறகு, இந்திய அணிக்கு தனது மறுபிரவேசம் பற்றி தனது எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்ட அவர், இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு விராட் கோலி தான் உதவினார் என்று கூறினார். கோஹ்லி இல்லையென்றால், இந்திய அணிக்கு மீண்டும் வந்திருக்க முடியாது என்று யுவராஜ் கூறினார்.
"நான் மீண்டும் திரும்பியபோது, விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார், அவர் எனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், நான் மீண்டும் வந்திருக்க மாட்டேன். ஆனால் 2019 உலகக் கோப்பையைப் பற்றி தேர்வாளர்கள் பார்க்கவில்லை" யுவராஜ் சிங், நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"ஆனால், தோனி எனக்கு உண்மையான படத்தைக் காட்டினார், அவர் எனக்கு தெளிவுபடுத்தினார், அவர் தன்னால் முடிந்தவரை செய்தார்."
மேலும் படிக்க | 200 மில்லியன் டாலர்கள் சம்பளமா? யார் அந்த அதிர்ஷ்டசாலி? சவுதி புரோ லீக் அப்டேட்ஸ்
2011 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு எம்எஸ் தோனி மாறிவிட்டார்
2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை தோனி மீது நம்பிக்கை இருந்தது, ஆனால் தான், புற்றுநோயிக்கு சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய பிறகு நிலைமை மாறியது என்றும் யுவராஜ் கூறினார்.
"2011 உலகக் கோப்பை வரை, எம்எஸ் தோனி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், மேலும் 'நீ தான் என் முக்கிய வீரர்' என்று என்னிடம் கூறி வந்தார்" என்று யுவராஜ் கூறினார்.
"ஆனால் உடல்நிலை சரியில்லாமல் திரும்பி வந்த பிறகு ஆட்டம் மாறியது மற்றும் அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே 2015 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, என்னால் எதையும் சரியாக சொல்ல முடியவில்லை, இது எனது தனிப்பட்ட கருத்து” என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.
"ஒரு கேப்டனாக சில சமயங்களில் நீங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது, அனைவரையும் திருப்திப்படுத்தமுடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன், ஏனெனில் நாள் முடிவில் நாட்டுக்கு என்ன தேவை என்பதைப் பார்க்க வேண்டும்" என்று யுவராஜ் கூறினார்.
மேலும் படிக்க | IND vs WI: இவருக்கு எதற்கு துணை கேப்டன்? பிசிசிஐக்கு தொடரும் எதிர்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ