இன்னும் 4 ஆண்டுகள்தான்; சச்சினின் சாதனையை முறியடிப்பார் கோலி - பாண்டிங் ஆரூடம்

சச்சினின் சாதனையை விராட் கோலி இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் முறியடிப்பார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 21, 2022, 05:54 PM IST
  • விராட் கோலி 71 சதங்களை அடித்துள்ளார்
  • அதிக சதங்கள் பட்டியலில் பாண்டிங்கை சமன் செய்தார்
  • விரைவில் அவர் 100 சதங்கள் எடுப்பார் என பாண்டிங் ஆரூடம்
இன்னும் 4 ஆண்டுகள்தான்; சச்சினின் சாதனையை முறியடிப்பார் கோலி - பாண்டிங் ஆரூடம் title=

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்துவகையிலும் சேர்த்து சச்சின் டெண்டுல்கர் அதிக சதம் அடித்திருக்கிறார். அவர் மொத்தம் 782 இன்னிங்ஸ்களில் 100 சதங்களை அடித்திருக்கிறார். யாராலும் இந்தச் சாதனையை முறியடிக்க முடியாது என பரவலாக கருதப்பட்டது. ஆனால் விராட் கோலி பயங்கர ஃபார்மில் விளையாடியதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினின் சாதனையை கோலியால் மட்டும்தான் முறியடிக்க முடியும் என பேச ஆரம்பித்தனர். அதற்கேற்றார்போல்தான் அவரது ஆட்டமும் இருந்தது.

ஆனால் திடீரென ஃபார்ம் அவுட்டான கோலி ரன்கள் எடுக்க முடியாமல் கடுமையாக திணறினார். இதனால் அவர் பல ட்ரோல்களையும் சந்தித்தார். இருந்தாலும் மனம் தளராத கோலி தன்னுடைய பயிற்சியையும், நம்பிக்கையையும் மட்டும் கைவிடவில்லை. அதன்படி சமீபத்தில் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார். இது அவருக்கு 71ஆவது சதம் ஆகும். அதுமட்டுமின்றி வருடத்திற்கு பல சதங்களை அடித்துவந்த கோலி கிட்டத்தட்ட 1000 நாள்களுக்கு பிறகு இந்த சதத்தை அடித்தார்.

Tendulkar

கோலியின் இந்த 71ஆவது சதத்தின் மூலம் அவர் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை ரிக்கி பாண்டிங்கோடு (71 சதங்கள்) பகிர்ந்திருக்கிறார். கோலி சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் மேற்கொண்டு பல சதங்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கோலிதான் தொடக்கம் தர வேண்டும் - முன்னாள் விக்கெட் கீப்பர் யோசனை

இந்நிலையில், விராட் கோலியால் 100 சதம் அடித்து டெண்டுல்கரின் சாதனையை தொட இயலும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதங்களை எடுத்துள்ளார். இன்னும் 30 சதங்கள்தான் அவருக்கு தேவை. ஒரு ஆண்டுக்கு 5 அல்லது 6 சதங்கள் அடிக்கும் திறன் கொண்டவர். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் அவரால் 100 சதங்களை எடுக்க இயலும்” என்றார்.

மேலும் படிக்க | ரோகித் கேப்டனுக்கு சரியில்லை... மீண்டும் அவரை கொண்டு வாங்க; ரசிகர்கள் சொல்ல காரணம் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News