ஆண்ட்ரே ரசலின் அதிரடி!! மொய்ன் அலியின் அசத்தலான ஓவர்!! இறுதியில் பெங்களூர் அணி வெற்றி

நேற்று நடந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் திரில் வெற்றி பெற்றது விராத் தலைமையிலான பெங்களூரு அணி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2019, 10:44 AM IST
ஆண்ட்ரே ரசலின் அதிரடி!! மொய்ன் அலியின் அசத்தலான ஓவர்!! இறுதியில் பெங்களூர் அணி வெற்றி title=

கொல்கத்தா: நேற்று நடந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் திரில் வெற்றி பெற்றது விராத் தலைமையிலான பெங்களூரு அணி.

ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற  கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களம் இறங்கிய பெங்களூர் அணி 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து ஆடிய கேப்டன் விராட் கோலி மற்றும் மோயீன் அலி இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவசம் செய்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். மோயீன் அலி 66(28) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபுறத்தில் விராத் கோலி 100(58) சதம் அடித்தார். 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது பெங்களூரு அணி.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய கொல்கத்தா அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. அடுத்து ரோபின் உத்தப்பாவும் அவுட் ஆகா, கொல்கத்தா அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் அனைவரும் மனதில் எழுந்தது. பின்னர் வந்த அதிரடி நாயகன் ஆண்ட்ரே ரசல் அதிரடியில் இறங்கினார். பெங்களூர் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்த்தார் ஆண்ட்ரே ரசல். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றியை தொட்டுவிடும் என்ற கட்டத்தில் ஸ்டோனிஸ் மற்றும் மொய்லி அலியின் அசத்தலான ஓவரால் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆண்ட்ரே ரசல்25 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி மற்றும் 9 சிச்சர் அடங்கும்.

Trending News