இந்தியாவுக்கு எதிரான T20 அணியை அறிவித்தது மேற்கிந்திய தீவுகள்!

பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 30, 2022, 01:24 PM IST
  • பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஈடன் கார்டனில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
  • மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான T20 அணியை அறிவித்தது மேற்கிந்திய தீவுகள்! title=

கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) தேர்வுக் குழு, இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான T20I அணியை அறிவித்துள்ளது.  மேற்கிந்திய தீவுகள் பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் (India) சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.  மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

ALSO READ | திடீரென்று ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டீம் இந்தியா! 

பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைத் தொடர்ந்து பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. மேற்கிந்திய தீவுகள் முன்னணி தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (Desmond Haynes) கூறுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஐ தொடரில் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது, அதே வீரர்களுடன் இணைந்திருக்க முடிவு செய்தோம். அவர்கள் சிறந்த திறமையையும், ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர், அதே மாதிரியானதை நாங்கள் இந்திய சுற்றுப்பயணத்தின் போதும் எதிர்பார்க்கிறோம்.

wi

அகமதாபாத்தில் நடைபெறும் ODI தொடர் முடிந்த பிறகு பிப்ரவரி 16 முதல் தொடங்கும் மூன்று T20I போட்டிகளில் கீரன் பொல்லார்டு அணியை வழிநடத்துவார். நிக்கோலஸ் பூரன் துணை கேப்டனாக செயல்படுவார்.  அணியில் பொல்லார்ட் (Pollard) மற்றும் ஜேசன் ஹோல்டர் உட்பட பல ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோவ்மேன் பவல் அணியில் உள்ளார்" என்று கூறினார்.  தற்போது, ​​மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20  தொடரில் விளையாடுகிறது. 

 

டி20 தொடருக்கான முழு அணி: 

மேற்கிந்திய தீவுகள்: கீரன் பொல்லார்ட் (C), நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரொசெட்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மேன் பவல், ஒமாரியோ ஸ்மிபார்ட், ரொமாரியோ ஷெப்பர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

இந்திய: ரோஹித் சர்மா (C), கேஎல் ராகுல் (WC), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யா கே யாதவ், ரிஷப் பந்த் (WC), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், ஒய் சாஹல், டபிள்யூ சுந்தர், எம்டி சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்

ALSO READ | பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News