இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் நடத்தப்பட்டன.
இதையடுத்து, அடுத்த வருடம் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில், கடந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மினி ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
டிசம்பர் 23ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 10 அணிகளும் தங்கள் அணி தக்கவைக்கும் வீர்ரகளின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் இன்று மாலை 5 மணிக்குள் ஐபிஎல் குழுவிடம் இறுதிசெய்யவேண்டும் என கெடுவிதித்துள்ளது.
இதனை தொடர்ந்து, யாரெல்லாம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஏலத்தில் பங்குகொள்ள போகிறார்கள் என்பது மாலை 6 மணிக்கு மேல் தெரியவந்துவிடும். இந்நிலையில், அடுத்தடுத்து ஐபிஎல் அணிகள் குறித்த தகவல்கள் குவிந்து வருகின்றன.
விடைகொடுத்த பெங்களூரு
அதில், பெங்களூரு அணி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"இன்னும் சில மணிநேரங்களில் அணியில் தொடரும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். ஏலத்தால், அணியில் சிற்சில மாற்றங்கள் ஏற்பபட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நாங்கல் ஒரு வலிமைமிக்க அணியாக ஒன்றுபட்டு போராடினோம். எனவே, அணியாக எங்களின் அதுகுறித்த நினைவு எப்போதும் எங்களுடன் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கடந்த தொடரில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஃபாஃப் டூ பிளேசிஸ் கேப்டனாக நியமிக்ப்பட்டார். எனவே, இம்முறையும் அவரே தொடர்வாரா அல்லது பெங்களூரு அணி நிர்வாகம் வேறு யோசனையில் உள்ளதா என்பது இன்று ஏறத்தாழ உறுதியாகிவிடும்.
மேலும் படிக்க | புது அவதாரம் எடுக்கும் பொல்லார்ட் - கடைசிவரை Paltan தான்!
You are the Royal Challengers, you will always be our Royal Challengers.#PlayBold #WeAreChallengers #IPLRetention
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 15, 2022
இன்று மாலை வெளியீடு
தொடர்ந்து, பெங்களூரு அணியில் இருந்து ஜேசன் பெஹண்டிராஃப் மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் இருந்த நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபெர்குசன், ஆப்கன் வீரர் குர்பாஸ் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக, டெல்லியில் இருந்த ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரையும் கேகேஆர் வாங்கியுள்ளது. இந்த நான்கு டிரேடிங்கை தவிர்த்து வேறு வீர்ரகள் இந்த முறையில் மாற்றம் செய்யவில்லை.
மினி ஏலத்தை முன்னிட்டு, கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நாள் இறுதியில், எந்தெந்த அணிகள் எவ்வளவு தொகையுடன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது தெரிந்துவிடும்.
1st Retention of the Year……
.
.
.
.
Drum Roll Please.
.
.
.
.
.
Keep it going!
.
.
.
.
.
.
.
.
is Leo!— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
தொடர்ந்து, அணிகள் தங்களின் பட்டியலை மாலை 5 மணியுடன் நிறைவடைந்த பின், ஸ்டார் ஸ்போர்ஸ் நிகழ்ச்சியில் ஐபிஎல் அணிகள் நிலவரம் குறித்து வல்லுநர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள உள்ளனர். அந்நிகழ்ச்சியில் சஞ்சய் மஞ்சரேகர், ஆகாஷ் சோப்ரா, ஹர்பஜன் சிங், ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சிறப்பு நிகழ்ச்சி, மாலை 6 மணிமுதல் 7 மணிவரை நடைபெறும் என தெரிகிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பெஸ்ட் பௌலர் உம்ரான் மாலிக் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் வில்லியம்சன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ