WWE: உயிரை கொடுத்து வென்றார் ரோமன் ரெயின்ஸ்... நட்புக்காக அடி வாங்கிய ஷமி ஜெய்ன்

WWE Undisputed Universal Championship: கெவின் ஓவன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார் ரோமன் ரெயின்ஸ். இதில், ஷமி ஜெய்ன் வைத்த ட்விஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 29, 2023, 02:10 PM IST
  • பிளட்லைனில் இருந்து வெளியேறிய ஷமி ஜெய்ன்.
  • ராயல் ரம்பிளில் கோடி ரோட்ஸ் சாம்பியன்.
WWE: உயிரை கொடுத்து வென்றார் ரோமன் ரெயின்ஸ்... நட்புக்காக அடி வாங்கிய ஷமி ஜெய்ன் title=

Roman Reigns Won Universal Championship: உலகெங்கும் உள்ள WWE ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ரோமன் ரெயின்ஸ் - கெவின் ஓவன்ஸ் ஆகியோருக்கு இடையிலான Undisputed WWE Universal Championship போட்டி இன்று நடைபெற்றது. WWE யூனிவெர்ஸில் தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க ரோமன் ரெயின்ஸும், அவரிடம் இருந்து அந்த பட்டத்தை பறிக்க கெவின் ஓவன்ஸும் வெறி கொண்டிருந்தார்கள். 

ஆட்டம் தொடங்கியதில் இவரும் மாறி மாறி ஆதிக்கத்தை தொடர்ந்து வந்த நிலையில், ரெயின்ஸின் சூப்பர் பன்ச், ஸ்பியர் அனைத்தையும் தடுத்த கெவின் ஓவன்ஸ் அவரின் ஸ்வான்டன் பாம்மை போட்டு தாக்கி, ரோமன் ரெயின்ஸை படுக்கவைத்தார். தொடர்ந்து, ரோமன் ரெயின்ஸ்க்கு பாப்-அப் பவர்பாம் போட வந்த ஓவன்ஸை, WWE அதிகாரியான சாட் பாட்டன் திசை திருப்பினார்.

இதை பயன்படுத்திக்கொண்ட ரோமன் ரெயின்ஸ், ஓவன்ஸை பலமாக தாக்கினார். இதில் ஓவன்ஸ் நிலைதடுமாறி தரையில் சாயந்தார். அப்போதே, ரோமன் ரெயின்ஸின் தற்போதைய நண்பரும், கெவின் ஓவன்ஸின் முன்னாள் நண்பருமான ஷமி ஜெய்னைக் கொண்டு இரும்பு நாற்காலியை எடுத்து வரச்சொன்னார், ரோமன் ரெயின்ஸ். ஆனால், ஜெய்னுக்கு தனது முன்னாள் நண்பனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் தயங்கி நின்றார்.

மேலும் படிக்க | WWE Royal Rumble 2023: போராடி வென்ற கோடி ரோட்ஸ்... ஏமாற்றிய பிராக் லெஸ்னர்

இதையடுத்து, ரோமன் பிடியில் இருந்து தப்பிய ஓவன்ஸ், ரோமனை தாக்கத் தொடங்கினார். தொடர்ந்து, இரும்பு படிகளில் ரோமன் தலையை, கெவின் ஓவன்ஸ் முட்டி தாக்குவதை ஜெய்னால் பார்க்கவே முடியவில்லை. இதனால், ஜெய்ன், கெவின் ஓவன்ஸிடம் ரோமனை குறைவாக தாக்குமாறு பேசிக்கொண்டிருக்க, ரோமன் தனது தனித்துவமான ஸ்பியரை போட்டு ஓவன்ஸை வெற்றிக்கொண்டார். 

சாம்பியன்ஷிப்பை தக்கவைத்தாலும் பகை முடியாது அல்லவா. மற்ற அனைத்து பிளட்லைன் உறுப்பினர்களும் மேடைக்கு வர, அவர் கெவின் ஓவன்ஸை தாக்கினர். அதிலும் பால் ஹேமேன் கைவிலங்கை கொண்டு வந்து, ஓவன்ஸை கயிற்றுடன் கட்டிவைத்தார். தொடர்ந்து, பிளட்லைன் குழுவினர் ஓவன்ஸை தாக்கினர். நிராயுதபாணியாக நின்ற ஓவன்ஸை, ரோமன் இரும்பு சேரை வைத்து தாக்க முற்பட்டபோது, ஜெய்ன் அவரை தடுத்தார். 

இதனால்,  ரோமன் அந்த சேரை ஜெய்னிடம் கொடுத்து, ஓவன்ஸை அடிக்கும்படி கூற, ஜெய்ன் விகித்து நின்றார். நீண்ட யோசனைக்கு பிறகு, ஜெய்ன் இரும்பு சேரை வைத்து ரோமனை அடித்து, பிளட்லைன் குழுவில் இருந்து வெளியேற முடிவெடுத்தார். ஆனால், உசோ பிரதர்ஸ் உள்ளிட்ட பிளட்லைன் உறுப்பினர்கள் ஜெய்னை தாக்கினார். இதன்மூலம், Undisputed WWE Universal Championship பட்டத்தை ரோமன் ரெயின்ஸ் தக்கவைத்த நிலையில், பிளட்லைன் குழுவில் இருந்து ஜெய்ன் வெளியேறினார். 

முன்னதாக, இன்று நடைபெற்ற  ஆடவர் Royal Rumble சுற்றில் கோடி ரோட்ஸ், மகளிர்  Royal Rumble-இல் பியான்கா பெலேர் ஆகியோர் வென்றனர். மேலும், LA நைட் உடனான ஆட்டத்தில், ப்ரே வியாட் வெற்றிபெற்றார். 

மேலும் படிக்க | WWE-ல் களமிறங்குகிறாரா கார்த்தி?... வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News