இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கும்ளே நியமிக்கப்பட்டார்.
பி.சி.சி.ஐ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யவதாக அறிவித்ததது. இதற்காக விண்ணப்பித்த
57 பேரில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்து பிசிசிஐ-யிடம் சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்கு குழு வழங்கியிருந்தது.
இதில் கும்ப்ளே, ரவிசாஸ்திரி, லால்சந்த் ராஜ்புட், பிரவீண் ஆம்ரே, டாம்மூடி ஆகிய 5 பேரிடம் ஆலோசனைக்குழுவினர் நேர்காணலும் நடத்தினர். இறுதியில் அனில் கும்ப்ளேயை தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் உள்ளிட்ட உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 271 ஆட்டங்களில் 337 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரு வீரர்களில் கும்ப்ளேவும் ஒருவர் ஆவார். தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் அங்கம் வகிக்கிறார் கும்ப்ளே.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புமிக்க பதவியை ஏற்க உள்ளேன். மீண்டும் இந்திய அணியின் வீரர்கள் அறைக்குச்செல்ல இருப்பது மிகப்பெரிய கவுரவம்” என்று தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கும்ப்ளே கூறினார்.