நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் மோசமான தோல்விக்கான காரணங்கள் என்ன?

டீம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த இந்த முக்கியமான போட்டியில், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவுகளை நேரடியாக கேள்விக்குள்ளாக்கிய பல குறைபாடுகள் இருந்தன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2021, 10:50 AM IST
நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் மோசமான தோல்விக்கான காரணங்கள் என்ன? title=

India vs New Zealand: துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் கிவி அணி வெற்றி பெற்றது. முக்கியமான "டூ ஆர் டை" ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், இந்தியாவிற்கு அரையிறுதி செல்வதற்கான வழி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஆறுதல் தற்போதைக்கு என்னவென்றால், இந்தியாவின் தொடர் வெற்றி, ரன்-ரேட் மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் கடைசி நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த கணிப்பு மிகவும் கடினம். பாகிஸ்தானுக்கு எதிரான 10 விக்கெட் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் மீண்டும் பல தவறுகள் நடந்தன.

டீம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த இந்த முக்கியமான போட்டியில், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவுகளை நேரடியாக கேள்விக்குள்ளாக்கிய பல குறைபாடுகள் இருந்தன. வீரர்களிடம் வெற்றிக்குத் தேவையான பர்பாமன்ஸ் இந்த "டூ ஆர் டை" போட்டியில் எதிர்பார்த்தது போல் இல்லை. இதை கேப்டன் கோஹ்லியும் போட்டிக்கு பிறகு தெளிவான வார்த்தைகளில் கூறினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு 5 முக்கிய காரணங்களை ஆராய்வோம்.

மாற்றப்பட்ட தொடக்க ஜோடி:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளை வென்றுள்ளார். மேலும் பல அழுத்தமான போட்டிகளில் தொடக்க வீரராக நல்ல தொடக்கத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில போட்டிகளில் பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் போனதால், இளம் இஷான் கிஷான் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் செய்ய அனுப்பப்பட்டார். ரோஹித் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்தார். இந்த சோதனையின் விளைவு என்னவென்றால், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் எதிர்பார்த்தது போல செயல்படவில்லை. அவுட் ஆகி வெளியேறினார்கள். அதன்பிறகு கிவி அணி மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் அணி ஸ்கோர் 50 எட்டுவதற்கு முன்பாகவே பெவிலியன் திரும்பினர்.

ALSO READ |  படுமோசமாக ஆடிய இந்தியா! 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

"தகுதியற்ற" ஆல்ரவுண்டர் மீண்டும் வாய்ப்பு:
ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் மீண்டும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று டீம் இந்தியா நிர்வாகம், கேப்டன் விராட் கோலி மற்றும் வழிகாட்டி எம்எஸ் தோனி ஆகியோரின் உத்தி என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பே, தான் பந்துவீசத் தகுதியற்றவர் என்று பாண்டியா கூறியிருந்தார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக அவர் பந்துவீசினார். ஆனாலும் அவரால் 2 ஓவர்கள் மட்டுமே விய முடிந்தது, அதிலும் அவர் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கில் 23 ரன்கள் அடித்திருந்தாலும், பின்னர் ஒரு மோசமான ஷாட் ஆடியதால் கவனமாக விளையாட வேண்டிய நேரத்தில் நேரடியாக பீல்டரின் கையில் கேட்ச் கொடுத்தார்.

வருண் சக்ரவர்த்தி மீண்டும் வாய்ப்பு! அஸ்வின் கேள்விகுறி:
டி 20 உலகக் கோப்பையின் சூழல் உருவாகத் தொடங்கியதிலிருந்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு "ட்ரம்ப் கார்டு" மற்றும் "சுப்பா ருஸ்டம்" போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிராக, அவரது பவுலிங் எந்த பயனும் அளிக்கவில்லை. மேலும் அவர் எந்த விக்கெட்டையும் எடுக்காமல் 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் பின்னர் அவர் நியூசிலாந்துக்கு எதிராகவும் களமிறங்கினார். இம்முறை அவர் 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக்கொடுத்தார் மற்றும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

மறுபுறம், டி20 கிரிக்கெட்டில் 255 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியே இருக்கிறார். நியூசிலாந்திற்கு எதிராக, அஸ்வின் கடந்த காலங்களில் பலமுறை சிறப்பாகச் செயல்பட்டு, அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் திறமையானவர். அவரை ஏன் அணி நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ALSO READ | T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்தியாவிடம் நியூசிலாந்து தோற்றதில்லை!

ஐபிஎல் சிங்கங்களுக்கு என்ன ஆனது?
உலகக் கோப்பைக்கு முன்பு, ஐபிஎல்லில் சிறப்பாகச் செயல்பட்ட அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் குறித்து நிறைய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு சிறிய ஸ்கோரை இலக்காக வைத்தது. ஆனால் பந்துவீச்சாளர்கள் ஏன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தவில்லை என்ற கேள்வி தொடர்ந்து வைக்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் கடினமான சூழ்நிலைகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிர் அணிக்கு கடும் சவாலாக இருந்த இந்திய பந்துவீச்சாளர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் அப்படி இரு தாக்கத்தை ஏற்படத்தவில்லை என்பதே உண்மை.

ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து பேட்டிங் செய்ய வந்தபோது, ​​அதன் தொடக்க வீரர் டேரில் மிட்செல் (49) தனது பலத்தை வெளிப்படுத்தினார், பின்னர் கேன் வில்லியம்சன் எளிதாக அணிக்கு வெற்றியைக் கொடுத்தார். இதற்கிடையில், ஜஸ்பிரிட் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஐபிஎல்-ல் அற்புதமாக விளையாடிய முகமது ஷமி ஆகியோரால் அதிகம் எதுவும் செய்ய முடியவில்லை.

ALSO READ |  LIVE India vs New Zealand: இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News