10 கிலோ ஹாஷ் போதைப் பொருள் பறிமுதல் : இருவர் கைது..!

சென்னை தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 17, 2022, 08:49 PM IST
  • 10 கிலோ ஹாஷ் போதைப் பொருள் பறிமுதல்
  • கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
  • சென்னை போலீஸார் விசாரணை
10 கிலோ ஹாஷ் போதைப் பொருள் பறிமுதல் : இருவர் கைது..! title=
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ரயில்நிலையங்கள், ரயில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் பல்வேறு பாகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அது மட்டுமின்றி சென்னையின் முக்கிய நகரங்களில் போதை பயன்பாடும், விற்பனையும் அதிகரித்துள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சோதனையை மூடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலக காலனியில் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மறைமுகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ ஹாஷ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
 
இதனை தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சோழவரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகுமார் மற்றும் அவரது கூட்டாளி அழகுராஜா ஆகியோர கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாஷ் கடத்தி சென்னையில் வந்து பல பகுதிகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு பின்னால் இருக்கும் கும்பலுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர். 
 
 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News