தமிழகத்தில் முதல் முறையாக 18 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸால் இறந்தது...

தமிழகத்தில் முதல் முறையாக 18 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிர் இழந்துள்ளது...

Last Updated : Jun 29, 2020, 06:35 PM IST
  • விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த 18 மாத குழந்தை கொரோனா தொற்றுநோய் காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • அதேவேளையில் தஞ்சாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும் சனிக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதல் முறையாக 18 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸால் இறந்தது... title=

தமிழகத்தில் முதல் முறையாக 18 மாத குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிர் இழந்துள்ளது...

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த 18 மாத குழந்தை கொரோனா தொற்றுநோய் காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் தஞ்சாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும் சனிக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ: மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழிமுறைகள்...

தின்டிவனம் பகுதியை சேர்ந்த குழந்தை வெள்ளிக்கிழமை கோவிட் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம், மைக்ரோசெபாலி, ஆஸ்பிரேஷன் நிமோனியா, அதிர்ச்சி மற்றும் கோவிட் பாசிட்டிவ் போன்ற காரணங்களால் குழந்தை இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், 13 வயது சிறுவன் பல ஆண்டுகளாக டெர்மடோமயோசிடிஸ் (ஒரு ஆட்டோ-இம்யூன் நோய்) சிகிச்சை பெற்று வந்தார் எனவும், பின்னர் இதய செயலிழப்பு காரணமாக அவர் இறந்தார் எனவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களின்படி, சிறுவன் சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையை அடைந்து பின்னர் கொரோனா தொற்று இருப்பதை அறிந்துக்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவுக்கு குழந்தைகள் பலியாகிவருவது அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. 

READ | வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...

அந்த வகையில் செஞ்சி MLA மஸ்தான் கோவிட் -19 தொற்று காரணமாக குரோம்பேட்டில் உள்ள டாக்டர் ரெலா மருந்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கொரோனா தொற்று பெற்ற நான்காவது திமுக MLA இவர் என அறியப்படுகிறார். இவருக்கு முன்னதாக திமுக-வின் மூன்று MLA-க்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அன்பழகன் MLA அவர்கள் சிகிச்சை பலன் இன்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News