தற்போதைய தலைமுறை நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், பானி பூரி உள்ளிட்ட துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறது. பிடித்த உணவாக இருந்தாலும் சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் உணவு குறித்த ஆய்வாளர்கள் துரித உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்திவருகிறார்கள்.
இருந்தாலும் துரித உணவுகளின் மீதான மோகம் பலருக்கு இன்னமும் போகவில்லை. கடையில் வாங்கி சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் வீட்டிலேயே பெரும்பாலானோர் நூடுல்ஸ் போன்றவைகளை செய்கின்றனர்.
அதையே முழு நேர உணவாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இதனா உடல்நல பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நடக்கின்றன. அப்படி திருச்சியில் இரண்டு வயது குழந்தை நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை இருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை சாயின் உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு தாய் மகாலெட்சுமி சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார்.
மறுநாள் காலை மகாலட்சுமி குழந்தைக்கு மீண்டும் காலை உணவாக நூடுல்ஸை எடுத்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தை அன்று மதியம்வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளான்.
மேலும் படிக்க | நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியை பணியிடை நீக்கம் - அப்படி என்ன செய்தார் ?
இதனைத் தொடர்ந்து அன்று மாலை சாய் தருண் திடீரென வாந்தி எடுத்து கீழே விழுந்தான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க | ஒற்றைத் தலைமைதான் பலரது எண்ணம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
அதில், உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe