உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: ADMK!

உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுகவில் கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ளது!!

Last Updated : Nov 24, 2019, 01:34 PM IST
உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: ADMK! title=

உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுகவில் கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ளது!!

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அதிமுக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.   

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 
இதை தொடர்ந்து, அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்த பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிதி ரூ.226.0 கோடி நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் உள்ளதாகவும், தேர்தல் நிதியாக ரூ.46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்ப்பு மூலம் ரூ.1.9 கோடியும் பெறப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார். 

 

Trending News