மீண்டும் சென்னை சாலையில் திடீர் பள்ளம் - பீதியில் மக்கள்!

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னையில் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது!

Last Updated : Jan 26, 2018, 05:29 PM IST
மீண்டும் சென்னை சாலையில் திடீர் பள்ளம் - பீதியில் மக்கள்! title=

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னையில் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது!

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. பணிகள் நடைப்பெறம் இடத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தின் காரனமாக அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறி வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா சாலையில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல்  இடையே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் 25 அடி நீளத்திற்கு இந்த பள்ளம்  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மெட்ரோ ரெயில் மேலாளர் அரவிந்த் ராய் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.

மேலும் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஆய்வுமேற்கொள்ள மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News