Actress Gauthami : நடிகை கெளதமி அதிமுகவில் இணைந்தார்!

Actress Gauthami ADMK : நடிகை கெளதமி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். 

Written by - Yuvashree | Last Updated : Feb 14, 2024, 06:37 PM IST
  • பாஜகவில் இருந்து விலகிய கௌதமி..
  • அதிமுகவில் இணைந்தார்..
  • காயத்ரி ரகுராம் கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தார்
Actress Gauthami : நடிகை கெளதமி அதிமுகவில் இணைந்தார்! title=

Actress Gauthami Joins Hands With ADMK After BJP: தமிழ் நடிகை கௌதமி, பாஜகவில் இருந்து பிரிந்திருந்த நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த கௌதமி:

தமிழ் நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை, கிரீன் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வைத்து கௌதமி அதிமுகவில் இணைந்துள்ளார். 

பாஜகவில் இருந்து விலகல்:

நடிகை கௌதமி, 25 வருடங்களாக பாஜகவில் உறுபினராக இருந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மன வேதனையுடன் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.2021ஆம் ஆண்டு தேர்தலில் கட்சிக்காக ராஜபாளையம் தொகுதியில் பணியாற்றியதாகவும், தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அவர், பாஜக கட்சி தனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதனால் மிகுந்த மன வேதனையுடன் இந்த கட்சியில் இருந்து விலகுவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!

ஏற்கனவே அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம்!

நடன கலைஞரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜகவில் தமிழ்நாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்த இவர்,  தமிழ்நாடு பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில்  நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இக்கட்சி பெண்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை வழங்குவதில்லை என்றும், அண்ணாமலையின் தலைமையின் கீழ் எந்த பெண்ணும் பாதுகாப்புடன் இல்லை என்றும் கூறிவிட்டு அவர் தனது பதவியில் இருந்து விலகினார்.  இதையடுத்து, கடந்த மாதம் (ஜனவரி)19ஆம் தேதி தன்னை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளதை தொடர்ந்து, கௌதமியும் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகர் மீது கௌதமி கொடுத்த புகார்:

நடிகை கௌதமி, பாஜகவில் இருந்து விலகியதோடு தனது நிலத்தை மோசடி செய்ததாக கூறி பாஜக பிரமுகர் அழகப்பன் உள்பட அவரது குடும்பத்தினர்  பேர் மீது புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், இவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து போலீஸாரிடம் விளக்கம் கொடுத்த கௌதமி, தன்னை ஏமாற்றி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாகவும் தனக்கு நிலத்தை அல்லது இழப்பீட்டு தொகையை பெற்று தருமஆறு கேட்டிருந்தார். 

மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு: புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News