புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் களவாடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருப்பதுடன், அவர் மீது குடிநீர் வடிகால்வாரியம் விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள விஜயபாஸ்கர், 24 மணி நேரத்துக்குள் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் ரகுபதி நிரூபிக்கவில்லை என்றால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு! நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!
புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது, புதுகோட்டைக்கு வரும் காவிரி நீரை அதிமுகவை சேர்ந்த விஜயபாஸ்கர் களவாடியதாக குற்றம்சாட்டினார். அவர் பேசும்போது, " குஜராத் என்பது போதை பொருள் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதை பொருள்கள் வருகிறது. பின்னர் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோளப்பொரி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காலத்தில் குடிநீர் பிரச்னைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை, வழிமறைத்து அவரது கல்லூரிக்கும் சொந்த வயலுக்கும் கொண்டு செல்கிறார். சட்டவிரோதமாக வயலுக்கு காவிரி தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்" என கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை 24 மணி நேரத்திற்குள் நிரூபிக்காவிட்டால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதிலளித்துள்ளார். புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் அமைச்சர் ரகுபதி மீது புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்ததித்த அவர், என் மீது ரகுபதி வைத்துள்ள குற்றச்சாட்டை 24 மணி நேரத்தில் நிரூபிக்க தயாரா?, அப்படி நிரூபிக்கவில்லை என்றால் தன்னுடைய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என பேட்டியளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ