அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடிக்க தொடங்கி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுத் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அந்த கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாதியில் கிளம்பினார். பின்னர் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்றும் அங்கு ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | AIADMK: அதிமுக பொதுக்குழுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழு குழுவிற்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். வானகரத்தில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் நியமனம் உட்பட கிட்டத்தட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காலை 9.15 க்கு பொதுக்குழு தொடங்க உள்ள நிலையில் 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு சாதகமாக தான் வரும் என்று எடப்பாடி தரப்பு எண்ணி சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வெளியாட்கள் வராமல் இருக்க க்யூஆர்கோட் கார்டுகளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுக் குழுவிற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஆர் பி உதயகுமார் போன்ற முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு கிளம்பியுள்ளனர். கடந்த முறை அதிமுக பொதுக்குழு நடைபெறும் போது அந்த பகுதிகளில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இன்று அந்த வழியாக செல்பவர்களை மாற்று பாதையில் செல்லமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் நீதிபதியின் தீர்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR