AIADMK: அதிமுக பொதுக்குழுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

AIADMK General Body Meeting: நாளைக் காலை ஒன்பது மணிக்கு அதிமுக பொதுக்குழுக்கூட்டம் கூடவிருக்கிறது. இந்த கூட்டத்தில் என்ன நடக்கும் அதன் எதிர்வினைகள் என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பலவித கருத்துகள் உலா வருகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 08:07 PM IST
  • நாளைக் காலை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது
  • இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படலாம்
  • அரசியல் ரீதியில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் முக்கியமான கூட்டம் இது
AIADMK: அதிமுக பொதுக்குழுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் title=

சென்னை: சென்னையில் நாளை (2022, ஜூலை 11)நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்படலாம். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் விவாதம் செய்து பொதுச் செயலாளரை தேர்வுசெய்வது குறித்து முடிவெடுப்பார்கள்.  

அதிமுக-வில் ஒற்றைத்தலைமை சர்ச்சை நீடித்துவரும் நிலையில், சென்னையில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாத நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது, அதன் பிறகு அதிமுகவில் பல குழப்பங்களும் சச்சரவுகள் ஏர்பட்டன.

ஜூன் 23ம் தேதியன்று நடைபெற்றக் கூட்டத்தில், தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது. மேலும்,11-ஆம் தேதியன்று மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பொதுக்குழு கூட்டக்கூடாது என்று  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் நிராகரித்தது.

மனுவை நிராகரித்த நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதையடுத்து, எடப்பாடியின் தரப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து, நாளைய பொதுக்கூட்டத்திற்கு எந்த வில்லங்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டது.

பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கட்சியில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி, அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் அதிமுக பிரமுகர்களின் இடங்களில் வருமானவரித் துறையின் சோதனைகள் நடைபெற்று வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக அரசின் எடப்பாடி ஆட்சி காலத்தில் எடப்பாடி சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து செய்யாத்துரை நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த 'புதிய' சிக்கல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News