அதிமுக அணிகள் நாளைக்குள் கண்டிப்பாக இணையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வமும் சில நாட்களில் இணைப்பு பற்றிய நல்ல முடிவு வரும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அணிகள் இணைப்பு நாளைக்குள் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.