திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

தமிழகத்தில் விரைவில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஒரு மிகப்பெரிய கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தமிழகத்தின் தலையெழுத்து மாற்றி எழுதப்படும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சூசுகம்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2022, 03:47 PM IST
  • எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டம் மிக விரைவில் நடைபெறவுள்ளது: வி.சோமசுந்தரம்
  • வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்: வி.சோமசுந்தரம்
  • நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெற கூடிய நல்ல சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது: வி.சோமசுந்தரம்
திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில்‌ அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் 
நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுகும் தொண்டர்களுக்கும் வழங்கினர்.

இந்நிலையில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், 'திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆன நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரவில்லை,எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களால் தான் இந்த திமுக ஆட்சிக்கு சாவு மணி அடிக்க முடியும்' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 'அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டம் மிக விரைவில் நடைபெறவுள்ளது. அந்த கூட்டம் நடைபெற்றால் தமிழகத்தினுடைய தலையெழுத்து மாற்றி எழுதப்படும். திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும். அதிமுக மட்டும் தான் மக்களுக்காக இயங்க கூடிய ஒரு மாபெரும் இயக்கம் என்று செல்லக்கூடிய இயக்கமாக இருக்கு. 

மேலும் படிக்க | மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்! 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெற கூடிய நல்ல சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதிமுகவை எதிர்க்க கூடிய சக்தி வேறு எந்த ஒரு கட்சிக்கும் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் அதிமுகவின் தொண்டர்களின் பணி சிறப்பாக அமைய வேண்டும்' என்று கூறினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ மதனந்தபுரம் பழனி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். எஸ். ஆர். சத்யா, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய மாநகர பேருர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க | இந்தி திணிப்புக்கு எதிரான பேரணி.... விதை நாங்கள் போட்டது - மேற்கு வங்க பதாகைகளில் அண்ணா, கலைஞர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

More Stories

Trending News