சட்டமன்ற தேர்தல் இன்று வந்தால் கூட அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2022, 01:55 PM IST
சட்டமன்ற தேர்தல் இன்று வந்தால் கூட அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் title=

இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், "1965 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் மத்தியில் இருந்து கொண்டு இந்தி மொழியை கட்டாயப் படுத்தியதினால், இன்றும் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஏற்று கொள்ளப்படாத கட்சியாக உள்ளது. எதையும் வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது. எங்கள் கட்சி இரு மொழி கொள்கையின் படி செயல்பட்டு வருகிறது.

கொரோனா (Coronavirus) காலத்தில் ஊருக்கும், எதிர்கட்சிக்கும் தான் சட்டம், அறிவாலயத்தில் பூச்சி முருகன் இல்லத் திருமணத்திற்கு 500- 1000 பேரை கூட்ட முடிகிறது. அதே சாதரான மக்கள் திருமணங்களை கூட்டத்துடன் நடத்த முடியாது. கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்கிறார்கள். 

ஏன் பொங்கல் பரிசு தரமானதாக இல்லை? அரசியில் வண்டு, பல்லி விழுந்த புளி, உடைக்க முடியாத வெல்லம், உருகிய வெல்லம் என அனைத்திலும் கலப்படம். தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு அல்ல, குப்பையை கொடுத்துள்ளார்கள்.

மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையிலேயே பயத்தினால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

ALSO READ | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் 

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை என முதலமைச்சர் கூறுகிறார். தவறு செய்தவரே ஆளும் கட்சி தான். ஆட்சி என்றால் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதற்கு அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை.  அஞ்சமாட்டோம்!! நகர்புற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். 

8 மாதத்தில் திமுக (DMK) ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டமன்ற தேர்தல் இன்று வந்தால் கூட அதிமுக மகத்தான வெற்றி பெறும். மக்களுக்கு திமுக மேல் கோபமும், எங்கள் மீது பாசமும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க சூட்சமம் செய்கிறார்கள். நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்போம்.  

எங்கள் தலைவரால் தான் உங்கள் தலைவர் வெளியே தெரிந்தார். பட்டி தொட்டியெல்லாம் திமுக கொடியை பரப்பிய தலைவரின் சிலையை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தஞ்சையில் இன்று உடைத்துள்ளனர். இதிலுருந்து தெரிகிறது அவர்களுக்குள் உள்ள வன்மம்.

தஞ்சை மாணவி தற்கொலையின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். எதையும் கட்டாயப்படுத்த கூடாது. திராவிட இயக்கம் சாதி, மதம் கடந்தது. எதுவாக இருந்தாலும் கட்டாயம் கூடாது. விருப்பம் வேறு, கட்டாயம் என்பது வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. பாஜக சிந்தாந்தம் வேறு, அதிமுக சிந்தாந்தம் வேறு. எங்கள் சிந்தாதம் படி தான் நாங்கள் செல்வோம்." என்றார்.

ALSO READ | முன்னாள் முதல்வர் பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News