ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கட்சி தேர்தல் அலுவலகம் இன்று ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே திறக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மாநில வேட்பாளர் ஜெயபெருமாள் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, ஏப்ரல் 8 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பு பரப்புரையில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசும்போது, " கட்சி வேட்டி கட்ட முடியாமல், பிறரிடம் பிச்சையெடுத்து, ஒரு தொகுதி வாங்குற இந்த மானங்கெட்ட பொழப்பு எதுக்கு? என ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். நாங்களெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை, நாங்கள் அவரோடு ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே வண்டியில் பயணித்து ஒரே தேர்தல் மக்கள் பணியாற்றியவர்கள் தான். ஆனால், இந்திய வரலாற்றிலேயே தனக்கு அங்கீகாரம் அளித்த கட்சியின் வேஷ்டியை கட்ட முடியாமலும், கட்சியின் அடையாளமான சின்னத்தை பயன்படுத்த முடியாமலும் இருக்கிறார் என்றால் அது ஓபிஎஸ் ஒருவர் மட்டுமே என விமர்சித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக்கும், தொண்டர்களுக்கும் செய்த துரோகம் மற்றும் பாவம் தான் கட்சி வேஷ்டியை கட்ட முடியாமல் இருப்பதாக ஆர்பி உதயக்குமார் விமர்ச்சித்தார். " பிச்சையெடுத்து ஒரு தொகுதி வாங்கி வந்து நிக்கிரிங்களே, இது என்ன மானங்கெட்ட பொழப்பு. இதுல நின்னு என்ன சாதிக்கப்போரிங்க, என்ன சொல்லபோறிங்க, மானத்த விட்டு ரோசத்த விட்டு கட்சிய விட்டு துரோகம் செஞ்சு நா ராமநாதபுரம் தொகுதில போயி நிக்கப்போறேன் என்றவரிடம் செய்தியாளர்கள் நீங்கள் தேனியில் நிற்காமல் ஏன் ராமநாதபுரத்தில் நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நா அத நன்றிக்கடனா ஒருத்தருக்கு குடுத்துட்டேன்னு சொல்றாரு. இப்பவா நன்றிக்கடன நெனச்சு பாக்குறது... 'காலம்போன பின்னால் நன்றி கடனை நினைத்து பார்ப்பதில் அர்த்தம் கிடையாது'. அதுவல்ல காரணம் நீங்க அங்க உள்ள போக முடியாது.. ஒட்டு கேக்க முடியாது கடைசியா எங்க போகலாம்னு பாத்தா யாரா இருந்தாலும் கடைசில ராமேஸ்வரம் தான் வந்தாகணும். அதுபோலத்தான் இப்போது வழியின்றி இங்கு வந்து நிற்பதாகவும்" கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம், எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசியது குறித்து கேட்டபோது, அமைச்சர் ராஜ கண்ணப்பன் எத்தனை கட்சிக்கு போவாரு, எத்தனை முறை தோத்துருக்காரு' எனவே, அவரைப்பற்றி பேச தேவையில்லை. வீர வசனம் பேச எங்ககிட்டயும் ஆளுங்க இருக்காங்க, நாங்க பேசுனா என்ன ஆகும்னு அவருக்கே தெரியும் என கூறிய அவர், ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு 'அவரு கெழக்குல போவாரா மேற்குல போவாரா எங்க போவாரு எனத்தன மணிக்கி என்ன செய்வாருன்னு எங்களுக்கு தெரியும். எனவே அவரோட பருப்பு இங்க வேகாது என தெரிவித்தார். ஒரு நிலையில்லாத மனிதரைப்பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என்றும் ஆர்பி உதயக்குமார் காட்டமாக பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ