அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது? தேதியை அறிவித்த அமைச்சர் மூர்த்தி!

வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2024, 02:10 PM IST
  • 17ம் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது? தேதியை அறிவித்த அமைச்சர் மூர்த்தி! title=

மதுரை அவனியாபுரத்தில் நாளை மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்க உள்ளதையொட்டிட வாடி அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அதை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, பரிசு பொருள் கொடுப்பவர்கள் தனியாக டோக்கன் கேட்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு " அது தவறான செய்தி பரப்பப்படுகிறது. அப்படி எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.  கடந்தாண்டை விட இந்த ஆண்டு புதுமை குறித்த கேள்விக்கு, "கூடுதலாக காளைகளை அவிழ்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசலுக்கு பின் காளைகள் நிற்பதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க பேரிகேடுகளை வலுப்படுத்தி உள்ளனர். கூடுதல் காளைகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.  

மேலும் படிக்க | உதயநிதி துணை முதல்வர் என்பது வதந்தி - முதல்வர் ஸ்டாலின் தடலாடி!

பரிசுப் பொருட்களை தூக்கி எறியாமல் கொடுப்பது குறித்த கேள்விக்கு, " தூக்கி எறியாமல் கையில் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். பரிசு தாமதமாக கொடுத்தால் காளைகளின் எண்ணிக்கை குறையும் எனவே விரைவாக பரிசையும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பது குறித்த கேள்விக்கு, "17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்" என்று கூறினார்.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு வரும் ஜனவரி 15ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்பட உள்ளது.  உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது அவனியாபுரத்தை சுற்றி உள்ள மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜனவரி 15 நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் நாளைய தினம் அவனியாபுரம் வாடிவாசலை சுற்றியுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து விதமான மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த நாட்களில் தடையை மீறி மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் வாடிவாசல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மது கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வருகிற ஜனவரி 17ஆம் தேதி நடைபெறுகிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமாக அலங்காநல்லூர் வாடிவாசலை சுற்றியுள்ள 7 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அந்த தினங்களில் மதுபான விற்பனை சில்லறைகள் தடை மீறி ஏதும் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News