நிலத்தை திட்டத்திற்கு வழங்க மாநில அரசு உதவி செய்கிறது -EPS!

யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை; சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது -தமிழக முதலவர்!!

Last Updated : Jun 30, 2018, 01:06 PM IST
நிலத்தை திட்டத்திற்கு வழங்க மாநில அரசு உதவி செய்கிறது -EPS! title=

யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை; சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது -தமிழக முதலவர்!!

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

இதற்க்கு பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் பழனிசாமி பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைகளை மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவி செய்கிறது.

நிலம் அளிக்கும் உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலையாக சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை இருக்கும். அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பை தடுக்கவே இந்த 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

 

Trending News