ஜெயலலிதா விரும்பாதவர்கள் கையில் கட்சி மற்றும் ஆட்சி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பிறகு அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா விருப்பத்திற்கு மாறாக ஆட்சி மற்றும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கைகளுக்கு சென்றுள்ளது. அதிமுகவை மீட்டெடுக்க தான் தர்மயுத்தம் நடக்கிறது. இதில் வெற்றி பெறப்போவது நாம் தான். மத்திய, மாநில அரசுகள் ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடவடிக்கையை தொடங்கிய போதுதான் என்னுடைய பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். சாமான்ய தொண்டனின் ஆட்சி வரும் வரை தர்மயுத்தம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. pic.twitter.com/BsuLIdAKDB
— O Panneerselvam (@OfficeOfOPS) February 24, 2017
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள் விழா. pic.twitter.com/OGwuprzYVH
— O Panneerselvam (@OfficeOfOPS) February 24, 2017
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள்.
நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. pic.twitter.com/PqbF3z3ASW
— O Panneerselvam (@OfficeOfOPS) February 23, 2017