ராமநாதபுரம்: கூண்டோடு அதிமுகவில் இணைந்த அமமுகவினர்...!

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் உள்ள அமமுகவினர், தங்களின் தாய் கழகமான அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 4, 2023, 04:15 PM IST
  • ராமநாதபுரத்தில் அமமுகவினர் விலகல்
  • தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர்
  • அமமுகவுக்கு தொடரும் பின்னடைவு
ராமநாதபுரம்: கூண்டோடு அதிமுகவில் இணைந்த அமமுகவினர்...! title=

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றவுடன் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மாற்றுக் கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்கின்றனர். அமமுகவினர் பொறுத்தவரை அதிமுக இப்போது ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்க தொடங்கிவிட்டத்தால், தங்களின் தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்கின்றனர். 

மேலும் படிக்க | அதிரவைத்த சம்பவம்: காதலியால் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட காதலன்! விபச்சார பெண் கைது!

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றவுடன், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும், அனைவரும் அதிமுகவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று அமமுக நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவில் இணைந்துக் கொண்டு வரும் சூழலில், பரமக்குடியில் இருந்த அமமுகவினர் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், தங்களின் தாய்க்கழகமான அதிமுகவில் அவர்களை இணைத்துக் கொண்டனர்.   

பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News