யானைக்கு ஆந்தராக்ஸ் நோயா? உயிரிழப்பில் சந்தேகம்

ஆந்தராக்ஸ் நோய் தாக்கப்பட்டு இறந்த யானைகளை புதைத்தால், மற்ற விலங்குகளுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளதால், விறகு வைத்து  முழுமையாக எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 18, 2022, 07:14 PM IST
யானைக்கு ஆந்தராக்ஸ் நோயா? உயிரிழப்பில் சந்தேகம் title=

கோவை மாங்கரை அருகே நேற்றைய தினம் இறந்து மூன்று நாட்களான 30 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது கண்டறியப்பட்டது. யானையின் உடலிலிருந்து சேகரிப்பட்ட கழிவு மற்றும் மாதிரிகள் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பபட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

தொற்று நோய் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உடற்கூடாராய்வு மேற்கொள்ளபடும். சோதனை முடிவு வர 48 மணி நேரம் ஆகும் என்பதால் அது வரை யானையை, எந்த விலங்கும் நெருங்காத வண்ணம் சுற்றி ஐம்பது மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பு போடப்படுள்ளது.

நோய் தொற்று ஏற்படிருக்கலாம் என சந்தேகம் இருப்பதால் பி.சி.ஆர் பரிசோதனைக்காக யானையிலிருந்து சேகரிப்பட்ட கழிவு  மாதிரிகள்  அனுப்பட்டுள்ளது. நேற்று நடந்த ரத்த பரிசோதனையில் சரியான முடிவு வராததால் சென்னைக்கு சோதனைக்கு அனுப்ப வனத்துறை முடிவு.

ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை மருத்துவர்கள் சந்தேகிப்பதன் காரணமாக யானையின் கழிவு மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022 : "வரையாடு பாதுகாப்புத் திட்டம்” - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

ஆந்தராக்ஸ் நோய் தாக்கப்பட்டு இறந்த யானைகளை புதைத்தால், மற்ற விலங்குகளுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளதால், விறகு வைத்து  முழுமையாக எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்தராக்ஸ் நோய் தாக்கி யானைகள் இறந்து, சரியான முறையில் உடலை தகனம் செய்யாஅவிட்டால், மேலும் பல வனவிலங்குகள், கால்நடைகளுக்கு இந் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News