தமிழக அரசின் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தமிழ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், அன்புமணி ராமதாசும் பொது விவாதம் நடத்த உள்ளனர்.
இந்த விவாதம் இன்று சென்னை உள்ள முத்தமிழ் பேரவையில் 4-5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினரான அன்புமணி ராமதாசும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பாமக, கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி இருந்தார்.
Watch live in #MakkalTv , the #PublicDebate with #TNSchoolEducation Minister
Mr Senkottaiyan @ 4PM (today). #Lead #Change #Progress #PMK pic.twitter.com/t2hfBkhfJG— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 12, 2017
இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், விவாதத்திற்கு நாங்கள் தயார், நேரத்தையும், இடத்தையும் நீங்களே சொல்லுங்கள் என்று கூறினார். ஆனால் பாமகவிற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறி செங்கோட்டையன் விலக பார்த்தார். ஆனாலும் அன்புமணி ராமதாஸ், வரும் 12-ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு முத்தமிழ் பேரவையில் நேரடி விவாதத்தில் பேச அமைச்சர் செங்கோட்டையனின் வருகைக்காக காத்திருப்பேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.