ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

பாமக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்தார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 29, 2022, 02:53 PM IST
  • பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ்
  • பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
  • ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் சந்திப்பு
ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ் title=

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நேற்று நடந்தது. இந்த பொதுக்குழுவுக்கு ஜி.கெ.எ மணி தலைமை தாங்க, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

இதற்கிடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தலைவராக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தச் சூழலில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்புமணி ராமதாஸுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டுமென கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அன்புமணி ராமதாஸை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை பாமக தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எனவே பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில், அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்தார்.

மேலும் படிக்க | பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சரின் அட்வைஸ்

Anbumani Ramadoss meets Stalin

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார்.

Anbumani Ramadoss meets EPS

பாமக-வின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் சட்டமன்ற உறுபினர் செல்வப் பெருந்தகை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News