கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்! அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த அப்பாசாமி மருத்துவமனைக்கான கொரோனா சிகிச்சை அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 19, 2020, 08:00 PM IST
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்!  அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு title=

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு (Corona Treatment) அதிக கட்டணம் வசூலித்ததால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி (Appasamy Hospital) மருத்துவமனைக்கான கொரோனா சிகிச்சை அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்ததாக, இந்த மருத்துவமனை மீது மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதுக்குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சென்னை அப்பாசாமி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில், கொரோனா (COVID-19) நோயாளி ஒருவருக்கு18 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12.5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் முன்பணம் ரூ.2.5 லட்சத்தை போக மீத கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

இதுக்குறித்து விசாரித்ததில், இந்த சம்பவம் உண்மை என உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

No description available.

Trending News