சென்னை: தமிழகத்தில் நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி, அதேபோல திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு கட்சியை தவிர நாம் தமிழர் கட்சியும் (Naam Tamilar Katchi) போட்டியிடுகிறது. இந்த வருட இறுதியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற உள்ளதால், அதற்கு முன்பே இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பல வியூகங்களை வகுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட தயாராகி வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. அதுக்குறித்து அவர் கூறுகையில், தற்போது பொதுப்பார்வையாளர்களை நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் செலவின பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறினார். மேலும், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து 63 ஆயிரம் பயிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே இரண்டு தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குசாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.