தமிழ் தான் இணைப்பு மொழி...தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்...

இந்தி மொழியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக தமிழ் தான் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  கூறியுள்ளார். 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 11, 2022, 01:34 PM IST
  • அமித்ஷாவின் கருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி
  • தமிழ் தான் இணைப்பு மொழி என பதில்
  • இணையத்தில் வைரலாகும் ரஹ்மானின் பதில்
தமிழ் தான் இணைப்பு மொழி...தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்... title=

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் எனப் பேசினார். இந்த கருத்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ழகரத்தை கொண்ட கோளை தமிழன்னை கையில் ஏந்தியிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன் கீழ், தமிழணங்கு என்றும், "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரி இடம்பெற்றிருந்தது. அமித்ஷாவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ட்விட்டர் பதிவு அமைந்திருந்தது. 

மேலும் படிக்க | இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசன் வரிகளை பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்

இந்த சூழலில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அமித்ஷாவின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி" எனக் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்மையில் 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | "தனித்துவ அடையாளங்களை சிதைத்தழிக்கிறது பாஜக" கொதித்தெழும் சீமான்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News