பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலை: அடுத்து என்னாச்சி?

குழந்தை தலையில் மாட்டிகொண்ட ஸ்டீல் பாத்திரத்தை போராடி குழந்தைக்கு சிறு காயமும் பாதிப்பும் ஏற்படாமல் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாவகமாக மீட்டனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 12:06 PM IST
  • போராடி மீட்கப்பட்ட பிஞ்சுக்குழந்தை
  • தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல் பாத்திரம்
பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலை: அடுத்து என்னாச்சி? title=

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வனிதா தம்பதியருக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் வீட்டில் உள்ள சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அஜித் நீண்ட நேரம் கூச்சலிடவும் பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பல மணி நேரம் போராடினர்.

மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70

மேலும் படிக்க | 41 மில்லியன் ஆண்டுக்கு முன் செக்ஸ் செய்யும் போது பிசினில் சிக்கி இறந்த ஈ கண்டு பிடிப்பு!!

இந்த நிலையில் பாத்திரத்தை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்று வந்துள்ளனர் அங்கு இருந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி குழந்தையின் தலையில் இருந்த  பாத்திரத்தை வெட்டி காயமின்றி பத்திரமாக அகற்றினர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கியிருந்த சில்வர் பாத்திரத்தை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

மேலும் படிக்க | கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News